ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2017ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு வருடத்திலும் கடைசி மாதங்களில் மட்டும் பல படங்கள் வெளியாகும். அதே போல இந்த ஆண்டிலும் இந்த மாதத்தில் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் 7ம் தேதி 'கொடி வீரன்' படமும், 8ம் தேதி 'ரிச்சி, 12 12 1950, சத்யா' ஆகிய படங்கள் வெளியாகின. அடுத்த வாரம் டிசம்பர் 14ம் தேதி 'மாயவன்' படமும், 15ம் தேதி 'அருவீ, வீரா, பிரம்மா.காம், சென்னை டூ சிங்கப்பூர், பள்ளிப் பருவத்திலே, பஞ்சு மிட்டாய்,' ஆகிய ஏழு படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று கூட பெரிய பட்ஜெட் படமில்லை. அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். அதிகப் படங்கள் வெளிவரும் நாட்கள் எல்லாமே சிறிய பட்ஜெட் படங்களாகவே இருக்கின்றன.
ஒரே சமயத்தில் இப்படி ஏழு படங்கள் மோதிக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தில் பொருளாளர் பொறுப்பில் உள்ள எஸ்.ஆர். பிரபு, தயாரித்திருக்கும் 'அருவி' படமும் இந்தப் போட்டியில் உள்ளது. அவர் சார்ந்த தயாரிப்பாளர் சங்கம் இப்படிப்பட்ட போட்டிகளை தவிர்க்க என்ன செய்யப் போகிறது அதை நாளை நடைபெற உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவில் சொன்னால் அனைத்து சிறிய தயாரிப்பாளர்களுக்கும் நல்லது. செய்வார்களா ?.