ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வெற்றி பெற்று வருகிறார் நடிகர் நான். தற்போது எம்சிஏ., என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகியுள்ள நிலையில், சமீபத்தில் அப்படத்தின பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நானி. அப்போது அவரிடம் எதிர்காலத்தில் ஹிந்தி சினிமாவில் நடிக்கும் ஆர்வம் உள்ளதா? என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு நானி பதிலளிக்கையில், தெலுங்கு சினிமாவையும், தெலுங்கு ரசிகர்களையும் நான் ரொம்பவே நேசிக்கிறேன். தெலுங்கில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து நல்ல நடிகராக ரசிகர்களில் மனதில் நிறைந்திருக்க வேண்டும் என்பதே எனது ஆசையாக உள்ளது. ஹிந்தியில் நல்ல வாய்ப்புகள் வந்தாலும் நான் நடிக்கமாட்டேன். முழு நேரத்தையும் தெலுங்கு சினிமாவுக்காகவே அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் நானி.