ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு தயாரிப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்த ஆர்.கே.சுரேஷ் தாரை தப்பட்டை, மருது உட்பட சில படங்களில் வில்லனாக நடித்தார். அதை தொடர்ந்து பில்லா பாண்டி, வேட்டை நாய், தனிமுகம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அதேசமயம் ஸ்கெட்ச் உள்ளிட்ட சில படங்களில் வில்லன் வேடத்தையும் தொடர்ந்து வருகிறார். தற்போது நடிப்பில் அடுத்தகட்டமாக 70 வயது கிழவராக நடிக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.
ஆனால் இது தமிழில் அல்ல. முதன்முறையாக மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ள ஆர்.கே.சுரேஷ், 'சிகாரி சாம்பு' என்கிற படத்தில் தான் இப்படி ஒரு கெட்டப்பில் நடிக்கிறார். அதுமட்டுமல்ல, இதேபடத்தில் 25 வயது இளைஞராகவும் நடிக்கிறார். குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தில் ஷிவதா நாயர் கதாநாயகியாக நடிக்க, 'ஆர்டினரி' புகழ் சுகீத் இந்தப்படத்தை இயக்குகிறார்.