Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அறம் படத்தில் நயன்தாராவின் சேலை ரகசியம்

23 நவ, 2017 - 11:24 IST
எழுத்தின் அளவு:
Nayantharas-Aramm-Saree-secret

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பலதரப்பட்டவர்களின் வரவேற்பை பெற்றுள்ள படம் அறம். இந்தப் படத்தில் நயன்தரா இரண்டு சேலைகள் மட்டுமே அணிந்து நடித்திருப்பார். ஒரு சேலை அவரை உயர் அதிகாரி விசாரிக்கும்போது அணிந்திருப்பது. இன்னொரு சேலை அவர் களத்தில் நின்று பணியாற்றும்போது அணிந்திருப்பது. இந்த க்ரே கலர் சேலையைத்தான் அவர் கடைசி வரை அணிந்திருப்பார். இது ஏன் என்பது குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் கூறியிருப்பதாவது:

நயன்தாராவுடன் நான் இணைந்து பணிபுரிவது இது மூன்றாவது படம். ஆரம்பம், காஷ்மோரா படங்களுக்கு பிறகு இப்படத்தின் நயன்தாராவுடன் பணியாற்றியுள்ளேன். அவர் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகையோடு பணிபுரிவது என்றுமே ஒரு அற்புதமான அனுபவம். அவரது ஈடுபாட்டை கண்டு அசந்துள்ளேன். இக்கதையின் மேல் இயக்குனர் கோபி நைனார் வைத்திருந்த நம்பிக்கையும் அவரது எழுதும் தான் இப்படத்தை இவ்வளவு சிறந்த படமாக்கியுள்ளது .வார்த்தைகளால் சொல்லமுடியாத திருப்தியையும் பெருமையையும் அறம் எனக்கு கொடுத்துள்ளது .

எனது சினிமா வாழ்க்கையில் சிறந்த படங்களில் ஒன்று அறம். இப்படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே, அழிந்து வரும் நமது பூமியின் அவல நிலையை சித்தரிக்க க்ரே கலரை பயன்படுத்தி, அதற்கான லைட்டிங்கை கொடுத்து, சில ஒளிப்பதிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன். இதற்கு ஏற்பதான் நயன்தாரா அவர்களின் ஆடையும் வடிவமைக்கப்பட்டது.

நயன்தாரா நேர்மையான கலெக்டர், நேர்மையானவர்கள் எப்போதும் எளிமையானவர்களாக இருப்பார்கள். அதானல் எந்த டிசைனும் செய்யப்படாத காட்டன் சேலையை அவருக்கு காஸ்ட்டியூமாக தேர்வு செய்தோம். வறண்ட பூமி, கண்ணீருடன் மக்கள், ஒரு பெரும் பிரச்சினை இவற்றுக்கு நடுவில் நயன்தாரா பளபள வண்ண உடை அணிந்து வந்தால் அது உறுத்தலாக இருக்கும். இதனால் அந்த மண்ணுக்கேற்ற க்ரே கலர் தேர்வு செய்யப்பட்டது.

வறண்ட பூமி, கடும் வெயில் போன்ற அம்சங்களால் படப்பிடிப்பு சிரமமாக இருந்தது. ஆழ்குழாய் காட்சிகளில் பயத்தை கொண்டு வருவது அவசியம். அதற்காக சில பிரத்தியேக லென்ஸை பயன்படுத்தினேன்.

இவ்வாறு ஓம் பிரகாஷ் கூறினார்.

Advertisement
ஊழல் அரசியல்வாதிகளை விரட்ட எல்லா நடிகர்களின் ரசிகர்களும் இணைய வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர்ஊழல் அரசியல்வாதிகளை விரட்ட எல்லா ... 40 படங்களில் போலீசாக நடித்தாலும் தீரன் தான் அடையாளம் தந்தது: போஸ் வெங்கட் 40 படங்களில் போலீசாக நடித்தாலும் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in