ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு சினிமாவின் மிக உயரிய விருதான நந்தி விருதுகள் கடந்த மூன்று வருடங்களுக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2016ஆம் வருடத்திற்கான சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது 'ஜனதா கேரேஜ்' படத்தில் நடித்த மோகன்லாலுக்கு கிடைத்துள்ளது. கொரட்டால சிவா இயக்கிய இந்தப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடிக்க, மோகன்லால் சத்யம் என்கிற 'காட்பாதர்' கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்தார். இந்தப்படத்தில் நடித்ததற்காக(வும்) ஏற்கனவே வழங்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி விருதும் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.