ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் நயன்தாரா நடித்த அனாமிகா படத்தை இயக்கியவர் சேகர் கம்முலா. அதன்பிறகு வருண்தேஜ் - சாய் பல்லவி நடிப்பில் பிடா படத்தை இயக்கினார். அடுத்தப்படியாக அரசியல் கதை ரெடி பண்ணியிருக்கும் சேகர் கம்முலா அந்த படத்தை ஆந்திராவில் 2018ல் வரப்போகிற சட்டசபை தேர்தலுக்கு முன்பு வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்.
2010-ல் சேகர் கம்முலா இயக்கிய லீடர் படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் தயாராகிறது. முதல் பாகத்தில் நாயகனாக நடித்த ராணாவே இந்த படத்திலும் நடிக்கிறார். அதோடு, லீடர் முதல் பாகத்தை விடவும் அதிரடியாக தற்போது ஆந்திராவில் நிலவும் அரசியல் சர்ச்சைகளை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குகிறாராம் சேகர் கம்முலா.
பாகுபலி-2விற்கு பிறகு ராணா நடித்த நேனே ராஜூ நேனே மந்திரி படம் அரசியல் படமாக அமைந்தது. தற்போது மீண்டும் அரசியல் படத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார் ராணா.