ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வாரிசுகள் ஹீரோக்களாகும் வரிசையில் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லாலும் ஹீரோவாக களத்தில் குதித்து, 'ஆதி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். 'த்ரிஷ்யம்' புகழ் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி வரும் இந்தப்படம் இசை, ஆக்சன் என இரண்டையும் சமமாக ஒன்றிணைத்து ஆக்சன் படமாக உருவாகிறது.
ஆச்சர்யமாக தனது முதல் படத்திலேயே, அதில் இடம்பெறும் ஆங்கில பாடல் ஒன்றை எழுதியுள்ளதோடு, அதை தானே பாடவும் இருக்கிறார் பிரணவ் மோகன்லால். அனில் ஜான்சன் என்பவர் இசையமைக்கும் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அங்கிருந்து திரும்பியதும் இந்தப்பாடல் பதிவு நடைபெற உள்ளது.