ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விவேகம் படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 58வது படத்தை இயக்கும் பட்டியலில் பல டைரக்டர்களின் பெயர்கள் இருந்தன. கடைசியில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவே அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குகிறார் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து அஜித் தரப்பிலோ அல்லது சிவா தரப்பிலோ எந்தவித தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி என்ற தம்பதி இயக்குனர்கள் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த தகவலை புஷ்கர் காயத்ரி மறுத்துள்ளனர்.
நாங்கள் எப்போதுமே கதையை ரெடி பண்ணிய பிறகு தான் அந்த படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்வோம். அந்த வகையில், எங்களது அடுத்த படத்திற்கான கதை விவாதமே இன்னும் முடியவில்லை. அது முடிவான பிறகு தான் அதற்கேற்ற நடிகரை அணுகுவோம் என்கிறார்கள்.