ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் 'என்னை அறிந்தால்', பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ள மலையாள நடிகை பார்வதி நாயர், ரசிகர்களிடம் ஓரளவு நன்றாகவே பாப்புலர் ஆகிவிட்டார். இதுதவிர மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான 'ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ்' படத்தில் பிருத்விராஜின் தோழியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். அதை தொடர்ந்து தற்போது 'ஓவர்டேக்' என்கிற மலையாள படத்தில் நடித்துள்ளார் பார்வதி நாயர்.
படத்தின் கதாநாயகனாக விஜய்பாபு நடித்துள்ளார். இந்தப்படம் விறுவிறுப்பான த்ரில்லராக உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் கதை ஒரே நாளில் நடப்பதுபோல படமாக்கப்படுள்ளதாம். கதைப்படி ஹைவேயில் சென்றுகொண்டிருக்கும் ஒரு டேங்கர் லாரியை விஜய்பாபு-பார்வதி நாயர் ஜோடி தங்களது காரில் ஓவர்டேக் செய்து செல்கின்றனர்.. இதை ஜீரணிக்க முடியாத டேங்கர் லாரி ட்ரைவர் இவர்களை விடாமல் துரத்தி கொல்ல முயற்சிக்கிறான். இதிலிருந்து அவர்கள் எப்படி தப்புகிறார்கள் என்பதுதான் முழுப்படமும்.. படத்தின் ட்ரெய்லரை ஒருமுறை பார்த்தால் 'மரகத நாணயம்' பட க்ளைமாக்ஸ் காட்சி உங்கள் கண்முன் வந்துபோகும் என்பது உபரி தகவல்.