ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் கடந்த வருடத்தின் 'சர்ப்ரைஸ் ஹிட்' என வர்ணிக்கப்படும் படம் தான் 'ஹேப்பி வெட்டிங்'. அதற்கு காரணம் இந்த 'ஹேப்பி வெட்டிங்' படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 20 கோடி வசூலித்தது. சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நடித்த காமெடி நடிகர்களை வைத்து அதே பாணியிலான காதல் கதை ஒன்றை செம ஜாலியாக சொல்லியிருந்தார் இயக்குனர் ஓமர் லுலு. அதை தொடர்ந்து இந்த வருடம் 'சங்க்ஸ்' என்கிற படத்தையும் ரிலீஸ் செய்து ஹிட் அடித்தார் ஓமர்..
தற்போது தனது மூன்றாவது பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார் ஓமர். முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகும் இந்தப்படத்திற்கு 'ஒரு ஆதார் லவ்' என டைட்டில் வைத்துள்ளார். குறிப்பாக ஆதார் கார்டு தரும் சிக்கல்கள், அந்த ஆதார் கார்டினாலேயே காதல் உருவாவது என ஆதார் கார்டை மையப்படுத்தி ரொமான்ஸ், காமெடி என பொழுதுபோக்கு படமாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் நடிக்க நான்கு புதுமுக ஹீரோக்களை தேடிக்கொண்டு இருக்கிறார் இயக்குனர் ஓமர் லுலு.. இதற்கான ஆடிஷன் வரும் செப்-27ல் நடைபெற இருக்கிறது.