ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் ஹீரோயின் கனவுடன் நுழைந்து கவர்ச்சி நடிகை ஆனவர் சோனா. பல படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடினார். கனிமொழி என்ற சொந்தப் படத்தை எடுத்து பல கோடிகளை இழந்தார் சோனா. செயற்கை நகை விற்கும் கடை ஆரம்பித்தார். அதுவும் சரியாக நடக்காததால் மூடிவிட்டார். தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சோனா. தீவிர உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, தியானம், சிகிச்சை என எல்லாவற்றையும் செய்து 7 கிலோ குறைத்து கொஞ்சம் ஸ்லிம்மாகி உள்ளார். விரைவில் தமிழ் மற்றும், மலையாளத்தில் தயாராகும் படம் ஒன்றில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதற்கான போட்டோ ஷூட் சமீபத்தில் நடந்தது. அதனை தற்போது வெளியிட்டுள்ளார் சோனா. விரைவில் நேரடி தமிழ் படம் ஒன்றிலும் நடிக்கிறார்.