ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் அமீர்கான் தற்போது சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், எந்த படத்தின் வசூலையும் கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
பேட்டியில் அமீர்கான் கூறுகையில், ஒரு படம் எவ்வளவு தொகைக்கு வர்த்தகமாகும் என்பதை உங்களால் கணிக்கவே முடியாது. எவ்வளவு தொகை வசூலாகும் என்ற உங்களின் நம்பிக்கை, அதற்காக நீங்கள் எடுத்த முயற்சி, அந்த படத்திற்கு செலவிடப்பட்ட பட்ஜெட் ஆகியவற்றை பொறுத்து தான் உங்களால் சொல்ல முடியும். பட்ஜெட்டிற்குள் படம் எடுத்தால் இழப்பு ஏற்படாது.
ஒரு நடிகராக நான் சொல்வதெல்லாம், பட்ஜெட்டிற்குள் படத்தை முடிக்க முயற்சிக்க வேண்டும். இதனால் கண்டிப்பாக பெரிய அளவில் இழப்பு ஏற்படாது. உங்களின் எதிர்பார்ப்பையும் மீறி அப்படம் வர்த்தகமாவதை உங்களால் தடுக்க முடியாது. கண்டிப்பாக ஓரளவுக்கு வசூலை பார்க்க முடியும் என்றார்.
அத்வைத் சந்திரன் இயக்கி உள்ள சீக்கெட் சூப்பர்ஸ்டார் படத்தை அமீர்கானே தயாரித்து, நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19 ம் தேதி ரிலீசாக உள்ளது.