சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
மலையாள சினிமாவின் லெஜன்ட்டான இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் சிஷ்யையாக அவரது நான்கு படங்களில் உதவி இயக்குனராகவும், ஒரு படத்தில் துணை இயக்குனராகவும் வேலை பார்த்தவர் ஸ்ரீபாலா மேனன். திலீப்பை கதாநாயகனாக வைத்து 'லவ் 24x7' என்கிற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான இவர் தான், தமிழில் வெற்றிவேல், கிடாரி படங்களில் நடித்த நாயகி நிகிலா விமலையும், தனது படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்துவிட்டு திரும்பிய இவர் சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இவரது கணவர் பிரபலமான ஒரு பத்திரிகையாளர். சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த ஸ்ரீபாலா, கணவருக்கு என்ன வாங்கி வர வேண்டும் என கேட்க, டூட்டி பெய்டு ஷாப்பில் நல்ல தரமான வோட்கா வாங்கி வர சொன்னாராம் கணவர். அங்கே ஸ்ரீபாலாவுக்கு ஹோம் மேட் தயாரிப்பான புதிய வகை வோட்கா பற்றி தெரியவர, அதை வாங்கி வந்து கணவரிடம் கொடுத்தாராம். ஆவலாக அதை எடுத்த அவரது கணவர், ஸ்ரீபாலாவையும் கம்பெனிக்கு அமரவைத்து கொஞ்சம் வோட்காவை ஊற்றிக் கொடுத்துள்ளார்.
அவ்வளவுதான் கொஞ்ச நேரத்தில் கணவன், மனைவி இருவருமே, தங்கள் ஆழ்மனதில் மறைத்து வைத்திருந்த சில விஷயங்களை, உண்மைகளை ஒருவர் மாற்றி ஒருவர் உளறிக்கொட்டி விட்டார்களாம். ஆனால் அதன்பின் அந்த விஷயத்தின் சீரியஸ்னஸ் உறைக்கவே இரண்டு நாட்கள் இருவராலும் முகம் கொடுத்து சகஜமாக பேச முடியவில்லையாம். (இதில் அதிசயம் என்ன இருக்கிறது.. இது வழக்கமாக நடப்பது தானே..?) அதனால் ஸ்ரீபாலாவின் கணவர் இனிமேல் தனது நண்பர்களில் சிலரை உண்மை பேசவைக்க இந்த வோட்காவைத்தான் பயன்படுத்தப்போகிறேன் என கூறியுள்ளாராம்.