ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாளை வெளிவர இருக்கும் விவேகம் படத்தின் படப்பிடிப்புகள் மனிதர்கள் கால்தடம் படாத பகுதிகளில் நடந்தது. அங்கு ஷெட் அமைப்பதும் சவாலாக இருந்தது என்கிறார் கலை இயக்குனர் மிலன். அவர் மேலும் கூறியதாவது:
விவேகம் படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். நாம் இதுவரை பார்த்த படங்களிலிருந்து இப்படத்தின் கதையும் உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் வித்தியாசமானது. இது ஒரு சர்வேதேச தர படம். இப்படம் பிரம்மாண்டமாக மட்டும் இல்லாமல் தொழில்நுட்பத்திலும் சர்வதேச தரத்தில் இருக்கும். தமிழ் சினிமா பெருமைப்படும் படமாக இது இருக்கும்.
மனிதர்கள் தடம் இல்லாத இடங்களை தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தினோம். சில வித்தியாசமான சுவாரஸ்யமான கலை டிசைன்களை இப்படத்தில் பின்பற்றியுள்ளேன். உழைப்பிலும் அர்பணிப்பிலும் எங்கள் எல்லோர்க்கும் அஜித் முன்னோடியாக இருந்தார். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு பெருமை. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. கலை இயக்கத்தில் சில புதிய பாணிகளை ஆராய்ந்து செயல்படுத்த இயக்குனர் சிவா எனக்கு முழு சுதந்திரமும் ஊக்கமும் தந்தார். அஜித் ரசிகர்களுக்கும் பொது ரசிகர்களுக்கும் "விவேகம்" பெரும் கொண்டாட்டமாக இருக்கும். என்கிறார் மிலன்.