14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கிய படம் மனம். அந்த படத்தில் மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா மற்றும் அவரது பேரன்கள் நாகசைதன்யா, அகில் ஆகியோரும் இணைந்து நடித்தனர். அந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்து அறிமுகமானார் அகில். அதன்பிறகு அகில் என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்தார்.
இந்தநிலையில், தற்போது மீண்டும் விக்ரம்குமார் இயக்கத்தில் ஹலோ என்ற படத்தில் நடித்து வருகிறார் அகில். ரொமான்டிக் ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் அகிலுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். அகிலின் தந்தையான நாகார்ஜூனா தயாரிக்கும் இந்த படத்தின் 50 சதவிகிதம் படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில், நேற்று ஹலோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹலோ படத்தை டிசம்பர் 22-ந்தேதி வெளியிட இருப்பதாக இப்போதே ரிலீஸ் தேதியையும் அறிவித்து விட்டார் நாகார்ஜூனா.