ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராமராஜன்-கனகா நடித்த படம் கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடிய அந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கனகாவிற்கு அப்பாவாக நடித்தவர் சில தினங்களுக்கு முன்பு மறைந்த நடிகர் சண்முக சுந்தரம். அந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்.
அதையடுத்து தற்போது அதேபோன்ற கரகாட்டக்கார கலைஞர்களின் வாழ்க்கையை மையாக வைத்து உருவாகியிருக்கும் படம் தொல்லைக்காட்சி. இந்த படத்தில் அஸ்வின்-ஜனனி அய்யர் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த படத்திலும் கரகாட்ட பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாம். இதற்காக அஸ்வின்-ஜனனி அய்யர் இருவரும் முறையான பயிற்சி எடுத்து அந்த பாடலில் நடனமாடியிருக்கிறார்களாம்.
மேலும், கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகி கனகாவுக்கு அப்பாவாக நடித்திருந்த நடிகர் சண்முகசுந்தரம், இந்த தொல்லைக்காட்சி படத்திலும் கதாநாயகி ஜனனி அய்யருக்கு அப்பாவாக நடித்திருக்கிறாராம். இந்த படத்திலும் அவர் நடித்துள்ள செண்டிமென்ட் காட்சிகள் பேசப்படும் வகையில் உள்ளதாம். தற்போது இறுதிகட்ட பணிகள் முடிந்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை சாதிக்கான் இயக்கியிருக்கிறார். ஆக, இந்த படம்தான் சண்முகசுந்தரம் நடித்துள்ள கடைசி படம் என்று தெரிகிறது.