ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல் சமீபத்தில் தன்னை கவர்ந்த 7௦ இந்திய சினிமாக்களின் பட்டியலை குறிப்பிட்டிருந்தார் அல்லவா. அந்த பட்டியலில் ஏழு மலையாள படங்களும் இடம்பிடித்திருந்தன. அந்த ஏழு படங்களுமே கிட்டத்தட்ட தொண்ணூறுகளுக்கு முன்பு வெளியான படங்கள் தான். பிரேம் நசீர், ஷீலா நடித்த செம்மீன் உட்பட, அடூர் கோபாலகிருஷ்ணன், எம்.டி.வாசுதேவ நாயர், தகழி சிவசங்கரன் பிள்ளை என மூத்த படைப்பாளிகளுடன் படங்களுடன் மம்முட்டி நடித்த இரண்டு படங்கள், மோகன்லாலின் ஒரு படம் ஆகியவையும் அந்த பட்டியலில் அடக்கம்..
மம்முட்டி நடித்த ஈநாடு, தனி ஆவர்த்தனம் ஆகிய படங்களும், மோகன்லால் நடித்த 'நமக்கு பார்க்கான் முந்திரிப்பு தோப்புகள்' படமும் தன்னை ரொம்பவே கவர்ந்த படம் என கூறியுள்ள கமல், இதில் 'நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள்' படத்தை பார்த்தபோது இப்படி ஒரு படம் தனக்கு கிடைக்கவில்லையே என பொறாமைப்பட்டதாக கூறியுள்ளார். இந்தப்பட்டியலில் கமல் நடித்த மலையாள படங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.