ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பிரேமம் மலையாள படத்தில் நடித்து மலர் டீச்சராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. அதன்பிறகு மலையாளத்தில் நடித்த காளி அந்த அளவுக்கு பெரிதாக பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை என்றாலும் தெலுங்கில் அவர் நடித்து வெளியாகியுள்ள பிடா படம் பிரேமம் படத்தைப்போலவே சாய் பல்லவியை பேச வைத்துள்ளது.
பிடா படத்தில் அவர் நடித்த கேரக்டரான பானுமதியையும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், பிடா படம் ஆந்திராவில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது. அந்தவகையில், வட அமெரிக்கா பாக்ஸ் ஆபீஸ் வெளியிட்டுள்ள தகவலில், பிடா படம் 2 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.