ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அப்படி இவர், கடந்த 2008-ம் ஆண்டு விவிடி தேங்காய் எண்ணெய் விளம்பரத்தில் நடித்தார்.
இந்நிலையில், இந்த விளம்பரத்திற்கான ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும், சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்த விளம்பரத்தை டிவியில் ஒளிப்பரப்பாகி வருவதாகவும், தனக்கு இழப்பீடாக ரூ.2.5 கோடி வழங்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார் நடிகை காஜல்.
இந்த வழக்கு இன்று(ஆக., 9) நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, காப்புரிமை சட்டப்படி சம்பந்தப்பட்ட நிறுவனம் விளம்பரத்தை 60 ஆண்டுகாலம் பயன்படுத்தலாம். அதை அந்நிறுவனமே முடிவு செய்ய வேண்டும் என்று கூறி காஜல் அகர்வாலின் மனுவை தள்ளுபடி செய்தனர்.