ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள படங்களை பொறுத்தவரை தமிழில் ரீமேக் ரைட்ஸ் வியாபாரத்தில் ஓரளவு நல்ல விலைக்கு போகின்றன. தெலுங்கில் இப்போதுதான் மலையாள சினிமாவை கவனிக்க ஆரம்பித்துள்ளார்கள்.. ஆனால் ஹிந்தியில் மலையாள படங்கள் ரீமேக் செய்யப்படுவதே அவை தமிழ், தெலுங்கில் ரீமேக்காகி வெற்றி பெற்ற பிறகுதான். அப்படியிருக்கையில் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவது என்பது மிகவும் அரிதான விஷயம்.. அப்படிப்பட்ட சூழலில் தற்போது மோகன்லால் நடித்துவரும் வில்லன் படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டை பொறுத்தவரை ஒரு கோடி என்பது ஜுஜுபி விஷயம் என்றாலும் மலையாள படங்களை பொறுத்தவரை இது மிகப்பெரிய விஷயம். அதிலும் வில்லன் படம் ரிலீஸாவதற்கு முன்பே இந்த அளவிற்கு விற்கப்பட்டுள்ளது தான் இதில் கவனிக்கத்தக்கது. மோகன்லால், ஹன்சிகா, ராசி கன்னா என பாலிவுட்டிலும் நன்கு அறிமுகமான முகங்கள் இந்தப்படத்தில் நடித்திருப்பதும் இந்த விலை கிடைத்திருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். அதுமட்டுமல்ல சமீபகாலமாக அனுராக் காஷ்யப், கரன் ஜோஹர், ரோஹித் ஷெட்டி போன்ற பாலிவுட் இயக்குனர்கள் பலரும் மலையாள படைப்புகளை பாராட்டி வருகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.