ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மோகன்லாலின் மகன் பிரணவ், தனது தந்தைபோல நடிப்பு பக்கம் போக விரும்பாமல், இயக்குனராக மாற விரும்பி தொழிலை கற்றுக்கொண்டாலும் கூட, அவரது ஜாதகத்தில் நடிகனாகத்தான் ஆக வேண்டும் என எழுதியுள்ளதை மாற்ற முடியுமா என்ன..? அந்தவகையில் பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் டைரக்சனில் 'ஆதி' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரணவ்.
ஆக்சன் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தில் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக கதாநாயகன் பிரணவிற்கு ஜோடியே இல்லை. அதனால் டூயட் பாடலும் இல்லை. இந்த விஷயத்தை கதாநாயகன் பிரணவ் மட்டுமல்ல, அவரது தந்தையான மோகன்லாலும் சந்தோஷமாகவே ஒப்புக் கொண்டுள்ளார்கள்..
எப்போதுமே வழக்கமான சினிமா நடைமுறைகளை உடைத்து படம் பண்ண வேண்டும் என்பது தான் இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் அணுகுமுறை. அதை தற்போது மோகன்லால் மகன் பிரணவ் அறிமுகமாகும் படத்தில் புகுத்தியுள்ளதன் மூலம் ரசிகர்களுக்கு ஷாக்கிங் கொடுத்துள்ளது மட்டுமல்லாமல், அடுத்து சினிமாவில் நுழைய இருக்கும் வாரிசு நடிகர்களுக்கும் ஒரு புது வழியை கட்டியுள்ளார். இந்தப்படத்தில் அனுஸ்ரீ, அதிதி ரவி என இரு நாயகிகளுடன் 'அநேகன்' புகழ் லேனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.