ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகரான மோகன்பாபு, சமீபகாலமாக அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மாமா மஞ்சு அல்லுடு காஞ்சுவே என்ற படத்தில் நடித்தவர், அதன்பிறகு சில படங்கள் கிடைத்தும் அந்த கதாபாத்திரங்கள் திருப்திகரமாக இல்லாததால் நடிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், தற்போது காயத்ரி என்ற பெயரில் ஒரு படத்தில் நடிக்கயிருப்பதாக அறிவித்துள்ளார் மோகன்பாபு. இந்த படத்தை மோகன்பாபுவின் ஸ்ரீ லட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் தயாரிக்கிறதாம். மதன் இயக்கும் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறாராம். மேலும், இந்த காயத்ரி படத்தில் மோகன்பாபுவின் மகனான மஞ்சு விஷ்ணுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறதாம்.