ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் அடுத்த முன்னணி ஹீரோயினாக வருவதற்கு அனைத்துத் தகுதிகளும் உடையவர் என திரையுலகினரால் பாராட்டப்பட்டு வருபவர் 'வனமகன்' படத்தில் அறிமுகமான சாயிஷா. தற்போது 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
நாகார்ஜுனா - அமலா தம்பதியினரின் மகன் அகில் அறிமுகமான 'அகில்' படத்தின் மூலம் 2015ம் ஆண்டு தெலுங்குத் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் சாயிஷா. அந்தப் படம் படு தோல்வியை அடைந்தாலும், தமிழில் 'வனமகன்' படத்தில் நாயகியாக அறிமுகமாகும் வாய்பைப் பெற்றுவிட்டார். அந்தப் படத்தில் அவருடைய நடிப்பையும், நடனத்தையும் பலரும் பாராட்டினர்.
தெலுங்கில் முதல் படத்தில் பெற்ற தோல்வியைச் சரிக்கட்டும் விதத்தில் தற்போது தெலுங்கிலும் வாய்ப்புகளைத் தேடி வருகிறாராம். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற திட்டத்துடன் வந்திருக்கும் சாயிஷா தற்போது ஐதராபாத்தில் ஒரு வீட்டை வாங்கியிருக்கிறார். அந்த வீட்டில் இதற்கு முன் சமந்தா குடியிருந்தாராம்.
சமந்தா அந்த வீட்டில் இருந்த போதுதான் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார். அந்த அதிர்ஷ்டம் தனக்கும் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் சாயிஷா.