ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொக்ரானில் இந்தியா அனுகுண்டு சோதனையை நடத்தி சாதனை படைத்த சம்பவத்தை மையமாக வைத்து, "பர்மானு தி ஸ்டோரி ஆப் பொக்ரான்" என்ற பெயரில் ஹிந்தியில் ஒரு படம் உருவாகி வருகிறது. ஜான் ஆபிரஹாம், டயானா பென்டி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அபிஷேக் சர்மா இயக்க, கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனமும், ஜான் ஆபிரஹாமும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படம் தொடர்பாக ஏற்கனவே ஜான் ஆபிரஹாமின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் ஜான், ராணுவ அதிகாரியாக தோன்றினார். இப்போது டயானாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. ஜானை போலவே, டயானா பென்டியும் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தாண்டு டிச., 8-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.