ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நேரம் சரியில்லாவிட்டால் எதார்த்தமாக நடந்த விஷயங்கள் கூட வேண்டுமென்றே நடப்பது போல ஆகிவிடும். மலையாள நடிகர் திலீப் விஷயத்திலும் அதுதான் நடந்து வருகிறது.. நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில் திலீப் மீது சந்தேக வலை அழுத்தமாக விழுந்துள்ளது.. அவரிடம் போலீஸ் விசாரணையும் நடைபெற்றுள்ளது.. சோஷியல் மீடியாவில் சிலர் இந்த நிகழ்வுகளை பற்றி சூசகமாக அதுவும் திலீப் நடித்த படங்களை வைத்தே கிண்டலடித்து வருகிறார்கள்.
ஜூலை-4, வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில் ஆகியவை திலீப் படங்களின் டைட்டில்கள்.. இரண்டு தினங்களுக்கு முன் ஜூலை-4ஆம் தேதி என்பதால் அதனை குறிப்பிட்டு, இனி அடுத்தது 'வெல்கம் ட்டூ சென்ட்ரல் ஜெயில்' என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார் ஒரு சோஷியல் மீடியாவாசி.. இன்னொருவரோ, திலீப், காவ்யாமாதவன் ஆகியோர் மோகன்லால், சுரேஷ் கோபியுடன் இணைந்து நடித்த 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்' என்கிற படத்தின் சிறிய வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார்..
அதில் திலீப் மோகன்லாலிடம், தனது புது மனைவியான காவ்யா மாதவனை காட்டி, “அண்ணே.. வீட்டிற்கு புதிதாக பெண் வந்த நேரம், ஐஸ்வர்யமும் சேர்ந்தே வந்துள்ளது” என கூறுவது போல இருக்கிறது.. அதாவது கடந்த வருடம் காவ்யா மாதவனை திலீப் திருமணம் செய்த பின்னர்தான் அவருக்கு இப்படி சோதனைகள் எல்லாம் நடக்கிறது என்பதாக கிண்டலாக டைமிங்காக குறிப்பிட்டுள்ளார் அந்த ரசிகர்