AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
இது வாரிசுகளின் காலம். காமெடி மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் ஹீரோவாகியுள்ள அதாகப்பட்டது மகாஜனங்களே படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில் காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமியும் ஹீரோவாகிறார்.
திரிபுரம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.பிருந்தா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் சசிக்குமார், சாம்ஸ், மனோபாலா, லொள்ளுசபா சாமிநாதன், பிச்சைக்காரன் தர்ஷ்யன், மந்திரவாதியாக வில்லி வேடத்தில் மானாட மயிலாட நிகாரிகா, நரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஹாபிஸ் எம்.இஸ்மாயில் ஒளிப்பதிவு செய்கிறர், கணேஷ் சந்திரசேகரன் இசை அமைக்கிறார். படம் பற்றி தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய வேதமணி கூறியதாவது:
ஹாரர் த்ரில்லர் கதை. சின்ன மெசேஜுடன் படத்தை எடுத்திருக்கிறோம். கர்மவினை என்பது நம் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. நகரத்தில் வாழும் ஒரு வாலிபனின் வாழ்க்கையில் விதி நடத்தும் விளையாட்டுகள் தான் படத்தின் கதை. நான் 20 ஆண்டுகளாக திரைத்துறையில் தான் இருக்கிறேன். டிவி சீரியல்களிலும் சில படங்களிலும் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறேன். கடும் போராட்டத்துக்கு பிறகு நானே தயாரித்திருக்கிறேன். பின்னணி இசை கோர்ப்பு பணி நடக்கிறது. அடுத்த மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும். விரைவில் இசை வெளியீடு நடக்கும்' என்றார்.