ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏப்ரல் 28ம் தேதி 'பாகுபலி 2' படம் வெளியிடப்பட்டது. மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்த இந்தப் படம் இதுவரையில் 50 நாளைக் கடந்தும், வசூலில் 1700 கோடிகளைக் கடந்தும் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு 500 கோடி ரூபாய் வசூலை அள்ளி நேரடி ஹிந்திப் படங்களின் சாதனையைம் முறியடித்தது. தமிழில் 'எந்திரன்' படத்தின் வசூலையும் மிஞ்சி முதலிடத்தைப் பிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆந்திராவில் 300 கோடியை நெருங்கிவிட்டது.
இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்து, உலக அளவிலும் 1000 கோடி வசூலைக் கடந்த முதல் இந்தியப் படம் என்ற சாதனையைப் படைத்து, அதை அடுத்த சில நாட்களில் 'தங்கல்' படத்திடம் உலக சாதனை வரலாற்றையும் இழந்தது. சீனாவில் மட்டுமே 'தங்கல்' படம் 1000 கோடி வசூலை அள்ளிவிட்டதால், மொத்த வசூலில் 'தங்கல்' தற்போதைக்கு முதலிடத்தில் இருக்கிறது.
'தங்கல்' படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால் 'பாகுபலி 2' படம் சீனாவில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற வேண்டும். அது சாத்தியமா என்பது படம் வெளியானால்தான் தெரியும். முதலில் சீனாவில் செப்டம்பர் மாதம் 'பாகுபலி 2' வெளியாகும் என்று சொல்லப்பட்டது, இப்போது ஜுலை மாதத்திலேயே வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்தான் சீனா வெளியீடு பற்றிய சரியான தகவல் வெளிவரும்.
இருந்தாலும் 'தங்கல்' வசூலை முறியடிக்கும் அளவிற்கு 'பாகுபலி 2'க்கு சீனாவில் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள்.