ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர்கள் ஜெய்யும் - அஞ்சலியும் காதலிப்பதாக நீண்டகாலமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதை இருவரும் மறுக்கவும் இல்லை, உண்மை என்று கூறவும் இல்லை. இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது இருவரும் பலூன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ஜெய்க்கு பிறந்தநாள் வந்தபோது, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அஞ்சலி ஏற்பாட்டின் படி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் நடிகை அஞ்சலிக்கு இன்று(ஜூன் 16-ம் தேதி) பிறந்தநாள். இதையொட்டி ஜெய், தன் டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதுவும் தன் காதலை அன்பு மழையாக பொழிந்துள்ளார்.
அதில், "எனக்கு நீ எவ்வளவு சிறப்போ... அதேபோன்று இந்த நாள் உனக்கு சிறப்பாக அமையட்டும். என் ஒவ்வொரு நாளையும் நீ நீயாக இருந்து சிறப்பாக்குறாய் என்பதை உனக்கு தெரிவித்து கொள்கிறேன். நானும், கடவுளும் என்றுமே உன்னுடன் இருப்போம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சு என்று கூறியுள்ளார்.
பதிலுக்கு அஞ்சலியும், ஜெய்க்கு தன் டுவிட்டரில் நன்றி தெரிவித்திருப்பதோடு, என்னோடு நீ இருப்பதற்கு நன்றி, அது என்று தொடர வேண்டும். இந்தநாளில் இப்படியொரு ஸ்பெஷல் வாழ்த்து சொல்லியதற்கும் நன்றி என்று கூறியுள்ளார்.