ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமா கலைஞர்களுக்கு பிலிம்பேர் விருது என்பது ரொம்பவே ஸ்பெஷலானது. இந்தவருடம் நடைபெறவுள்ள 64வது பிலிம்பேர் விருதுக்கான போட்டியில் கலந்துகொள்ள மலையாளத்தில் இருந்து பல படங்கள் அனுப்பப்பட்டன. அந்த படங்களில் இருந்து இறுதியாக ஒவ்வொரு பிரிவிலும் போட்டியிட நாமினேட் செய்யப்பட்ட படங்களையும் நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் உறுதி செய்து அறிவித்துள்ளது பிலிம்பேர் விருது கமிட்டி.
அந்தவகையில் கடந்த வருடம் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர் (திலீஷ் போத்தன்), சிறந்த நடிகர் (பஹத் பாசில்), சிறந்த குணச்சித்திர நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த குணச்சித்திர நடிகர் (அலான்சியர் லே), சிறந்த இசையமைப்பாளர் (பிஜிபால்), சிறந்த பாடகர் (பிஜிபால் - இடுக்கி), சிறந்த பாடலாசிரியர் (ரபீக் அஹமது - இடுக்கி) என எட்டு பிரிவுகளில் போட்டியிட நாமினேட் செய்யப்பட்டுள்ளது. மற்ற மலையாள படங்களை விட அதிகம் நாமினேட் ஆனா படம் இது மட்டும் தான். இதற்கு அடுத்ததாக தமிழில் சூர்யா நடித்துள்ள '24' படம் 7 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.