மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நாயகனாக நடித்து வரும் 101-வது படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது போர்ச்சுக்கல் நாட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. டான் வேடத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் இந்த படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைக்கிறார். இப்படத்திற்கு பல டைட்டீல்களை பரிசீலித்து வந்த பூரி ஜெகன்னாத், உஸ்தாத், ஜெயபாளையம் போன்ற டைட்டீல்களில் ஒன்று உறுதிசெய்யப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
ஆனால், அவர் முன்பு பரிசீலணை செய்து வருவதாக கூறப்பட்ட எந்த டைட்டீலையும் எடுத்துக்கொள்ளாமல், நேற்று பைசா வசூல் என்ற ஒரு டைட்டீலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் டைரக்டர் பூரி ஜெகன்னாத்.
ஜூன் 10-ந்தேதி (இன்று) பாலகிருஷ்ணாவின் பிறந்த நாள் என்பதால், நேற்று மாலை அப்படத்தின் டைட்டீலான பைசா வசூல் அறிவிக்கப்பட்டது. பைசா வசூல் படம் செப்டம்பர் 29-ந்தேதி திரைக்கு வருவதையும் உறுதிபடுத்தியிருக்கிறார் பூரி ஜெகன்னாத்.