ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்ராஎன்ற பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் சங்கமித்ரா படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இருவரும் கதாயகர்களாக நடிக்க, ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
சரித்திரப் படம் என்பதால் படத்தில் இடம்பெறும் போர் சண்டைக் காட்சிகளுக்காக வாள் பயற்சி, குதிரையேற்றம் கற்று வந்தார் ஸ்ருதிஹாசன். கான்ஸ் திரைப்பட விழாவிலும் சங்கமித்ரா டீமுடன் ஸ்ருதிஹாசனும் கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொண்டார்.
அதன் பிறகு என்ன காரணத்தினாலோ சங்கமித்ராவிலிருந்து ஸ்ருதிஹாசனை விலக்கிவிட்டதாக அறிவித்தது பட நிறுவனம். பின்னர் அதை உறுதி செய்த ஸ்ருதிஹாசன் தரப்பும், சங்கமித்ரா படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்தது.
இந்நிலையில், தன்னுடைய விலகல் பற்றி தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் சுந்தர்.சி தரப்பிலிருந்து அபாண்டமான பொய்த் தகவல்களை பரப்பி வருவதாக ஸ்ருதிஹாசன் கவனத்துக்கு வந்திருக்கிறது. அதை அறிந்ததும் கடுப்பான ஸ்ருதிஹாசன், உடனடியாய் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உள்ள மூன்றெழுத்து ஆல் இன் ஆல் பெண்மணிக்கு போன் போட்டு காய்ச்சி எடுத்துவிட்டாராம்.