ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'பாகுபலி-2' படத்திற்கு பத்து நாட்கள் முன்னதாகவே மலையாளத்தில் ரிலீசான படம் தான் நிவின்பாலி நடித்த 'சகாவு'.. கேரளாவிலும் 'பாகுபலி-2'வின் தாக்கத்தால் பல படங்கள் தியேட்டரில் இருந்து பின்வாங்கின. ஆனால் 'சகாவு' படம் திரையிட்ட பல இடங்களில் ஐம்பதாவது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது மிகவும் ஆச்சர்யமான விஷயம் தான்.. ஆனால் அந்தப்படத்திற்கும் அதில் நிவின்பாலியின் நடிப்பிற்கும் ரசிகர்கள் கொடுத்த மரியாதைதான் இந்தப்படம் 50வது நாளை நெருங்க காரணம் என்கிறார்கள் விமர்சகர்கள்.
ஒரு நேர்மையான கம்யூனிஸ்ட் சகாவு ஒருவரின் வாழ்க்கை பதிவாக இந்தப்படத்தை உருவாக்கினாலும் அதை கலைப்படம் என்றில்லாமல் காமெடி, சண்டைக்காட்சி என கமர்ஷியலாக, அதேசமயம் எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் கவனமாக உருவாக்கிஇருந்தார் இயக்குனர் சித்தார்த் சிவா. முதன்முதலாக நிவின்பாலி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.. இரண்டு வேடங்களுக்கும் உடல்மொழி, வசன உச்சரிப்பு என நடிப்பில் மிகுந்த வித்தியாசம் காட்டியுள்ளார்.