Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அக்டோபர் 6 ல் சமந்தா திருமணம்

21 மே, 2017 - 12:30 IST
எழுத்தின் அளவு:
Samantha---Naga-saithanya-wedding-may-planned-on-October-6th

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் இளம் நடிகருமான நாக சைதன்யாவை தீவிரமாக காதலித்து வருகிறார். இருவரும் ஐதராபாத்தில் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் காதலுக்கு நாகர்ஜுனா குடும்பம் பச்சைக்கொடி காட்டிவிட்டது. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் 29ந் தேதி ஐதராபாத்தில் நடந்தது.

நிச்சயதார்த்தத்தின்போது திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் என்றே சொல்லப்பட்டது. இருவரும் கையில் உள்ள படங்களை முடித்து கொடுத்த பிறகு திருமண தேதி அறிவிப்பப்படும் என்றார்கள். ஆனால் இருவருமே புதிய படங்களில் ஒப்பந்தமானார்கள். இதனால் இந்த ஆண்டுக்குள் திருமணம் நடக்க வாய்ப்பில்லை. சினிமாவுக்காக திருமணத்தை தள்ளிபோட்டுவிட்டு இருவரும் லிவ்விங் டூ கெதராக வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.


தற்போது சமந்தா தமிழில் இரும்புத்திரை, அநீதி கதைகள், விஜய் 61 படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறார். நாகசைதன்யா ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமந்தா வருகிற அக்டோபர் முதல் தேதியிலிருந்து 10ந் தேதி வரை தான் கொடுத்திருந்த தேதிகளை திரும்ப பெற்றுக் கொண்டிருக்கிறார். 10 நாட்களுக்கான படபிடிப்பை பின்னர் நடத்திக் கொள்ளுமாறு கேட்டிருக்கிறார்.


இதற்கு காரணம் சமந்தா, நாகசைதன்யா திருமணம் அக்டோபர் 6 ந் தேதி நடக்க இருக்கிறது. நாகார்ஜுனா குடும்ப வட்டாரங்கள் இதனை தெரிவிக்கிறது. திருமண ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாகவும் தெரிகிறது. திருமண தேதியை விரைவில் முறைப்படி அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் நடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in