Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

வைரமுத்துவை கலாய்த்த தங்கர்பச்சான்!

16 டிச, 2011 - 13:05 IST
எழுத்தின் அளவு:

இயக்குனர் தங்கர் பச்சானுக்கு , பாடலாசிரியர் வைரமுத்து மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை, சென்னை - வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்ற "கொள்ளைக்காரன்" படத்தின் ஆடியோ சி.டி.வெளியீடு விழாவின் மேடையில் வைரமுத்து நடுநாயகமாக வீற்றிருந்த வேளையில் பேச வந்தார்கள்..

வழக்கம்போலவே, தமிழனுக்கு தமிழ்நாட்டிலேயே அங்கீகாரம் இல்லை.... இந்தியாவுல சுத்தமா தமிழகர்களுக்கு எந்த உரிமையும் தரப்படுவதில்லை.... ஒரு பக்கம் திருட்டு வி.சி.டி., தொல்லை.... மற்றொரு பக்கம் படம் ரிலீஸ் ஆன ஒரு மணி நேரத்தில் முழுபடத்தையும் திருட்டுத்தனமாக ஒலி-ஒளி பரப்பி வரும் இணையதளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலை. அதனால இந்த மாதிரி ஆடியோ ரிலீஸ் எல்லாம் சுத்த வேஸ்ட்! படம் எடுக்கிற எந்த ஒரு தயாரிப்பாளும் சந்தோஷமா இல்லை.... இது மாதிரி சினிமாவுக்கு பல தொல்லைகள் என்றால்., தமிழனுக்கு., காவிரிப் பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னை, ஈழத்துல அப்பாவி தமிழர்கள் கொல்லப்படும் சூழல்., இது எல்லாவற்றையும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது!

அதனால., அவங்க கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு தேசிய விருது கொடுக்கிறேன்னு கூப்பிட்டா தமிழ் சினிமாக்காரன் யாரும் போகக்கூடாது.... அப்படியே போனாலும் அதை அவங்க மூஞ்சிலேயே கிடாசிட்டு வரணும். இது வரை அந்த விருதினை வாங்கியவர்களும் அவற்றை திருப்பி கொடுத்திட்டு எதிர்ப்பு காட்டணும்! எனக்கு தேசிய விருது கிடைச்சிருந்தா இதைத் தான் நான் செய்வேன்.தமிழ் சினிமாக்காரர்களுக்கு தேசிய விருது கவுரமில்லை...அவமானம் என்றார்.

அவரைத் தொடர்ந்து பேச வந்தார் ஐந்தாறு தேசியவிருதுகள் வாங்கியுள்ள வைரமுத்து., இதுமாதிரி விழாக்களோ, மேடைகளோ வேண்டாம் என்றார் தங்கர்பச்சான். அதுதவறு இது மாதிரி மேடை கிடைப்பதால் தானே தங்கர்பச்சானால் எது மாதிரி வேண்டுமானாலும் பேசமுடிகிறது. நாமும் கேட்டுத் தொலைக்க வேண்டியுள்ளது "டைமண்டு" (வைரம்) கவிஞர் தேசிய விருதுகளை மத்திய அரசிடம் ரிட்டர்ன் கொடுப்பது குறித்து தங்கர்பச்சான் பேசிய பேச்சுக்கு பதிலேதும் கூறாமல் எஸ்கேப் ஆனது செம காமெடி!

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Krish - Madurai,இந்தியா
18 ஆக, 2013 - 15:32 Report Abuse
Krish தங்கர் பச்சன் போன்ற ஆட்கள் வாய் கிழிய பேசுவதற்கு மட்டும்தான் லாயக்கு. இன்னும் எத்தனை காலம்தான் தமிழ் தமிழ் என்று பிரிவினைவாதம் பேசுவார்களோ தெரியவில்லை. நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை இந்த அறிவீலிகள் மறந்து விட்டனர். தங்கர் பச்சன் போன்ற ஆட்கள் எப்படி பேசுவது என்பதை கற்று கொள்ள வேண்டும். வைரமுத்து மட்டும்தான் தேசிய விருது வாங்கியுள்ளாரா? கமல், இளையராஜா,ரகுமான், பாலுமகேந்திரா மற்றும் பல தமிழர்கள் தேசிய விருது வாங்கி உள்ளார்களே, தமிழ் தமிழ் என்று சிலரை வேண்டுமானால் ஏமாற்றலாம். தங்கர் சார், முதலில் நாகரிகமாக பேச கற்றுகொள்ளுங்கள்,
Rate this:
sundaram - Coimbatore,இந்தியா
17 டிச, 2011 - 09:36 Report Abuse
 sundaram தங்கர் பச்சான் அவர்களே, நீங்கள் ரொம்பவும் சூடாக இருக்கிறீர்கள். கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு கொடுப்பார்கள் அதை படம் பிடித்து வைத்துக் கொள்ளலாம், காணொளிக் காட்சிகளில் மீண்டும் மீண்டும் காட்டலாம். பத்திரிகைகளில் பெரிய அளவில் பிரசுரிக்கலாம். அதன் மூலம் தமது தமிழ் வியாபாரத்தை பன் மடங்கு பெருக்கலாம் என்றுதானே தேசீய விருதுகளை பலமுறை " வாங்கி " வைத்துள்ளார்கள். திறமைக்கு வழங்கப்பட்டது என்றால் கொடுப்பவர்கள் கோட்டு அணிந்தால் என்ன கோவணம் அணிந்தால் என்ன. பெறுபவனின் திறமைக்கான அங்கீகாரம் அது. ஆனால், இங்கோ தமிழன் மீண்டும் மீண்டும் அங்கீகாரத்தை அரசியல் பலத்தினால் " வாங்கு" கிறான் என்பதை நீங்கள் பகிரங்கமாக பேசியதற்கு தமிழ் மொழி மீது பற்று வைத்துள்ள ஒருவன் என்ற முறையில் நன்றிகள் பல.
Rate this:
தமிழ் நெஞ்சன் - india,இந்தியா
17 டிச, 2011 - 02:16 Report Abuse
 தமிழ் நெஞ்சன் என்ன செய்வது, வைரமுத்து - ஒரு மானக்கேட்ட முத்து. அவருக்கு தேவை விருதுகள்தான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in