ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரில்லர் படம் யு டர்ன். பவன்குமார் இயக்கிய இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையான ஸ்ரத்தா ஸ்ரீநாத், பின்னர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில் நடித்தார். தற்போது இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி ஆகிய தமிழ்ப்படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும், அப்படி ஸ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு பல படங்கள் கிடைக்க காரணமான யு டர்ன் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக ஏற்கனவே சமந்தா கூறி வந்தார். ஆனால் தற்போது அவர் கைவசம் பல படங்கள் இருப்பதோடு, அவரது திருமணமும் நெருங்கிக் கொண்டிருப்பதால், யுடர்ன் படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஓ காதல் கணிமணி பட நாயகியான நித்யாமேனன் ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.