Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அர்ஜுனின் 150 படத்திற்கு ரஜினி வாழ்த்து

14 மே, 2017 - 15:41 IST
எழுத்தின் அளவு:
Rajini-greets-Arjun-150th-film

ஆக்ஷன் கிங் அர்ஜுன் தற்போது நடித்து வரும் படம் நிபுணன். அருண் வைத்தியநாதன் இயக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் பிரசன்னா, வரலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளார். உலகம் முழுவதும் சுற்றும் கதை. இது அர்ஜுனின் 150வது படம். இந்தப் படத்தின் டீசர் மற்றும் காட்சிகளை பார்த்து ரஜினி அர்ஜுனை பாராட்டி உள்ளார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் கூறியதாவது:

அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தை தயாரித்து இயக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 150 படங்களையும் கடந்த அவரது உன்னத உழைப்புக்கும், சற்றும் குறையாத அவரது உற்சாகத்துக்கும் ஈடு இணை இல்லை என்று தான் சொல்லுவேன்.அவரது சாதனையை கொண்டாடும் விதமாக நிபுணன் படக் குழுவினர் இந்தப் படத்தின் டீசரை 150 திரை உலக பிரபலங்கள் மூலமாக ட்வீட் செய்து வாழ்த்த வேண்டும் என திட்டமிட்டோம். ஆயினும் எங்களுக்கு ஒரு தயக்கம், இது சாத்தியமா,நடக்குமா, அவ்வாறு ட்வீட் செய்ய அவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்ற ஐயத்தோடு தான் அவர்களை அணுகினோம். அர்ஜுன் சார் மேல் திரை உலக கலைஞர்கள் வைத்து இருக்கும் மரியாதை என்னவென்று நாங்கள் அறிந்துக் கொண்ட தருணம் இது. நாங்கள் அணுகிய திரை உலக கலைஞர்கள் எல்லோரும் உடனடியாக ஒப்புக் கொண்டனர்.


சில நாட்களுக்கு முன்னர், அர்ஜுன் சார் உட்பட எங்கள் படக் குழுவினர் ரஜினி காந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற சென்றோம். அப்போது அவர் நிபுணன் படத்தின் டீசரை பார்த்தார். மிக மிக உற்சாகமாகி எங்களை பாராட்டினார். அர்ஜுன் துப்பாக்கி வெற்றியை சுடும் என்று அவருக்கே உரிய பாணியில் பாராட்டியதோடு , படம் வெளிவரும் நேரம் தான் நிச்சயம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்தார்.


அர்ஜுன் சாருக்கும் , ரஜினி சாருக்கும் இருந்த பரஸ்பர அன்பையும் மரியாதையையும் கண்டு நாங்கள் வியந்துப் போனோம். நிபுணன் டீசர் நாளை ( 15ஆம் தேதி) வெளி வர உள்ளது. அர்ஜுன் சாருடைய உழைப்பை கொண்டாட எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன் . என்கிறார் இயக்குனர் அருண் வைத்ய நாதன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in