அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'கம்மட்டிப்பாடம்' படம், வில்லன் நடிகராக வலம் வந்த விநாயகனின் குணச்சித்திர நடிப்பை வெளிக்கொண்டு வந்ததுடன், சில விருதுகளையும் பெற்று தந்தது.. அந்தவகையில் மீண்டும் லைம் லைட்டுக்குள் வந்துள்ளார் விநாயகன், தற்போது பி.உன்னிகிருஷ்ணன் டைரக்சனில் மோகன்லால் நடித்து வரும் 'வில்லன்' படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடிப்பதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் மோகன்லாலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விநாயகன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் இவர்கள் இருவரின் பின்னணியில் இயக்குனர் உன்னிகிருஷ்ணனும் இருப்பதால் 'வில்லன்' பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் விநாயகன் இந்தப்படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் இருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன் மோகன்லால் நடித்த 'மாந்திரீகம்' என்கிற படத்தில் தான் விநாயகன் அறிமுகமானார். அதன்பின் மோகன்லாலுடன் இணைந்து 'ஒன்னமேன்', 'சோட்டா மும்பை', 'சாகர் அலைஸ் ஜாக்கி' என சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.