ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை மையமாக கொண்டு சச்சின் மில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் தன் வாழ்க்கை கதையில் சச்சினே நடித்துள்ளார் என்பதுதான் இன்னும் சிறப்பு. சச்சினின் நண்பர் ஜேம்ஸ் எரஸ்கின் இயக்கி உள்ளார்.
சச்சினுடன் வீரேந்திர சேவாக், மாயுரேஷ் பென், அர்ஜுன் டெண்டுல்கள், சச்சின் மனைவி அஞ்சலி ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் 26ந் தேதி வெளிவருகிறது. படத்தின் புரமோசனை சச்சின் இப்போதே தொடங்கிவிட்டார். இந்தியா முழுவதும் படக் குழுவினருடன் பணயம் செய்து படத்தை புரமோட் பண்ண இருக்கிறார். மும்பையில் நடந்த புரமோசன் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு சச்சின் பேசியதாவது.... "இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டை பற்றிய படம் அல்ல. சச்சின் என்ற தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கைப் படம். அதில் கிரிக்கெட் ஒரு பகுதியாக இருக்கும். நான் கடந்து வந்த பாதை, எனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள், அனுபவங்கள், என் காதல், என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள் ஆகியவைதான் படம்.
என் வாழ்க்கையை படமாக எடுப்பதில் உடன்பாடில்லாமல்தான் இருந்தேன். ஆனால் என் நண்பர் ஜேம்ஸ் அற்புதமான திரைக்கதையாக அதை எழுதிக் கொண்டு வந்தபோது அதை படித்து பார்த்து பிரமித்து படமாக்க ஒத்துக் கொண்டேன். ஒரு கட்டத்தில் நீங்களே நடியுங்கள் என்றார் அதுவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று நடித்தேன். என் வாழ்க்கையை இன்னொரு முறை வாழ்ந்து பார்த்த அனுபவத்தை அது கொடுத்தது" என்றார் .