ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரீ-என்ட்ரியில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்துக்கொண்டி ருந்த வடிவேலு, தெனாலிராமன், எலி படங்களில் நாயகனாக நடித்தார். அதையடுத்து கத்திச்சண்டை, சிவலிங்கா படங்களில் காமெடியனாக நடித் துள்ளார். தற்போது விஜய்யுடன் அவரது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஆர்கேவுடன் இணைந்து நீயும் நானும் நடுவுல பேயும் என்ற படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் வடிவேலு.
இந்த படத்தில் காமெடியனாக இல்லாமல் இன்னொரு ஹீரோ போன்ற வேடத்தில் நடிக்கிறார் வடிவேலு. முக்கியமாக, இதுவரை வெறும் காமெடியனாக மட்டுமே நடித்து வந்துள்ள வடிவேலு, இந்த படத்தில் காமெடி வில்லனாக நடிக்கிறார். அந்த வகையில், அவரும், ஆர்கேவும் எதிரும் புதிருமான காமெடி வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்காக தனது கெட்டப்பையும் மாற்றும் வடிவேலு, வித்தியாசமான காஸ்டியூம்களில் தோன்றி கலக்கல் செய்யப்போகிறாராம்.