பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கேரளாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படத்திற்கு வரவேற்பு இருக்கும். காரணம் விஜய்க்கு அங்குள்ள ரசிகர்களும் அதிகம். ரசிகர் மன்றங்களும் அதிகம். குறிப்பாக மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருத்விராஜ் என அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் விஜய் படங்களை பார்க்கும் பட்டியலில் இருக்கிறார்கள் அந்தவகையில் லேட்டஸ்ட்டாக விஜய்க்கு பெருமை சேர்க்கும் விதமாக துல்கரின் நண்பரான சன்னி வெய்ன் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு 'போக்கிரி சைமன்' என டைட்டில் வைத்துள்ளார்கள்..
பிருத்விராஜ் நடித்த 'டார்விண்டே பரிமாணம்' படத்தை இயக்கிய ஜிஜோ ஆண்டனி தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் விஜய்யின் அதி தீவிர ரசிகராக 'போக்கிரி சைமன்' என்கிற கேரக்டரில் நடிக்கிறார் சன்னி வெய்ன். குறிப்பாக 'போக்கிரி' படம் பார்த்துவிட்டு அதேபோல நடை, உடை பாவனைகளுடன் சண்டியராக வளம் வரும் கேரக்டர் என்பதால் இந்த டைட்டிலை வைத்துள்ளார்களாம். இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரயாகா மார்ட்டின் நடிக்கிறார்.. இந்தப்படத்தில் இவருக்கு கிளாசிக்கல் டான்சர் வேடமாம்.