ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஞாபகங்கள், இளைஞன், ஸ்ட்ராபெர்ரி, நையப்புடை ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் பாடலாசிரியர் பா.விஜய். இதில் ஸ்ட்ராபெர்ரி என்ற படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். அந்த படம் வெற்றியை கொடுத்தது. அதையடுத்து தற்போது ஆருத்ரா என்றொரு படத்தில் சத்தமில்லாமல் நடித்து வருகிறார் பா.விஜய். இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
மேலும், இளைஞன் படத்தில் இருந்தே ஆக்சன் காட்சிகளிலும் நடித்து வந்த பா.விஜய், இந்த படத்தில் ஒரு ரிவென்ஜ் ரோலில் நடிக்கிறார். குப்பத்தில் வாழ்ந்து வரும் அவர், பழிவாங்குவது தான் கதையாம். ஆனால் க்ளைமாக்ஸ் வரை அவர் பழிவாங்கும் விசயங்கள் சஸ்பென்சாகவே இருக்கு மாம். இந்த படத்திற்காக வழக்கமான பாணியில் இருந்து விலகி, வித்தியாசமான கெட்டப் போட்டி ருக்கும் பா.விஜய், இதுவரை தான் நடித்ததில் இந்த ஆருத்ரா படம் தன்னை திரும்பிப்பார்க்கும் வைக்கும் என்று எதிர்பார்க்கிறாராம்.