Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பிருத்விராஜ் பட இயக்குனர் மீது டிசைனர் குற்றச்சாட்டு..!

11 ஏப், 2017 - 16:10 IST
எழுத்தின் அளவு:
a-case-issue-on-actor-prithiviraj

பிருத்விரா-பாவனா இணைந்து நடித்துவரும் படம் தான் 'ஆடம் ஜான்'.. சமீபத்தில் நடந்த ஒரு கசப்பான நிகழ்வுக்குப்பின், அதிலிருந்து தேறி, பாவனா நடித்து வரும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று முன் தினம் பிருத்விராஜ் வெளியிட்டார்.. கையில் துப்பாக்கியுடன் பிருத்விராஜ் போஸ் கொடுத்தபடி நிற்பதும் அதன் கீழே எழுதப்பட்ட “அவர்கள் அவளை தூரமாக எடுத்துச்சென்றார்கள்.. இப்போது அவன் அவர்கள் அனைவரையும் திரும்பி கீழே கொண்டுவருகிறான்” என்கிற டேக்லைனும் சேர்ந்து இது ஒரு ரிவென்ஜ் திரில்லர் என சொல்லாமல் சொல்கின்றன..


இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வரவேற்பு கிடைத்துள்ள அதே நேரத்தில் இந்த டிசைனை வடிவமைத்த ஜித்து சந்திரன் என்பவர் இந்தப்படத்தின் இயக்குனர் ஜினு ஆப்ரஹாம் மீது குற்றாசாட்டு ஒன்றை வைத்துள்ளார்.. இந்தப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே இந்தப்படத்தின் டைட்டில் டிசைனிங்கில் தானும் தனது குழுவும் பணியாற்றி வருவதாகவும் இதற்காக பலவிதமான டிசைன்களை உருவாக்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார் ஜித்து சந்திரன்


ஆனால் கடந்த சில மாதங்களாக இயக்குனரை தன்னால் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அடுத்த கட்ட பணிகள் குறித்து குழப்பமான நிலையில் இருந்த சமயத்தில் தான் இந்தப்படத்திற்காக தாங்கள் டிசைன் செய்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது என்றும் கூறியுள்ளார் ஜித்து சந்திரன். இதுகுறித்து, டைரக்டர் ஜின்னு ஆப்ரஹாம் தன்னிடம் முறைப்படி எந்த தகவலும் கொடுக்காமல் படத்திற்கு வேறு டிசைனரை மாற்றியுள்ளதோடு அவர்கள் பெயரிலேயே தான் வடிவமைத்த டிசைனை பயன்படுத்தி இருப்பது என்ன நியாயம் என குமுறியுள்ளார். மேலும் 'பெப்கா'வில் உறுப்பினராக உள்ள ஜித்து சந்திரன் இதுகுறித்து இயக்குனர் மீது புகார் அளிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in