Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இன்று மம்முட்டி.. நாளை மறுநாள் திலீப்..!

30 மார், 2017 - 16:35 IST
எழுத்தின் அளவு:
Today-Maammooty,-Tomorrow-Dileep-movie-releasing

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீசாவதால் களைகட்ட தொடங்கியுள்ளது மலையாள திரையுலகம். மலையாள சினிமாவை பொறுத்தவரை ஓணம் பண்டிகையைப்போல, சித்திரை விஷுவும் (ஏப்-14) விசேஷமான பண்டிகை நாள் தான். இருந்தாலும் முன்கூட்டியே கல்லா கட்ட வேண்டும் என்பதால் இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே படங்களை ரிலீஸ் செய்ய தொடங்கிவிட்டார்கள். இன்று மம்முட்டி நடித்துள்ள 'தி கிரேட் பாதர்' படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது.


கடந்த சில வருடங்களாக யதார்த்த மனிதர்களின் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்த மம்முட்டி, இந்தப்படத்தில் கமர்ஷியல் அவதாரம் எடுத்திருக்கிறார் என்பதுதான் இந்த எதிர்பார்ப்புக்கு காரணம். சினேகா, ஆர்யா, ஷாம், மியா ஜார்ஜ் என நட்சத்திரப்பட்டாளம் கொண்ட இந்தப்படத்தை பிருத்விராஜ் தயாரித்துள்ளார். மம்முட்டி ஏற்கனவே நடித்த 'பிக் பி' பாணியில் இந்தப்படம் இருக்கும் என ஆருடம் சொல்கிறார்கள்.


இதேபோல இந்த சீசனில் திலீப் நடித்துள்ள 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' என்கிற படம் நாளை மறுநாள் (ஏப்-1) வெளியாக இருக்கிறது. சமீபத்தில் கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது வாங்கிய ரெஜிஷா விஜயன் தான் இந்தப்படத்தின் கதாநாயகி. இது இவருக்கு இரண்டாவது படமாகும். கே.பிஜூ என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மோகன்லாலின் 'புலி முருகன்' முதல்நாள் ரெக்கார்டுகளை முறியடிப்பதற்கு மம்முட்டி படத்துக்கு உதவுவதற்காகவும் மம்முட்டி படத்தால் தனது ஒப்பனிங் வசூல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் தனது படத்தை இரண்டு நாட்கள் தள்ளி ரிலீஸ் செய்கிறார் திலீப் என்கிற பேச்சும் ஒருபக்கம் அடிபடுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in