Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா, எஸ்.பி.பி., மோதல் ஏன்? - பரபரப்பு தகவல்கள்

21 மார், 2017 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Why-clash-between-Ilayaraja-and-SPB

இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இணைந்தால் இசை பிரவாகமெடுத்து ஓடும். இவர் மெட்டில் அவர் பாட்டில் தமிழகமே ஆடியது ஒரு காலம். இருவரும் இணைந்து சுமார் 2 ஆயிரம் பாடல்களை தமிழுக்கு தந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இசை மேதைகள் இருவரும் இப்போது எதிர் எதிர் திசையில் நின்று மோதிக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் ஈகோ, இருவரின் வாரிசுகளுக்கும் இடையே நடக்கும் இசை வியாபாரம் இரண்டும்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா தோற்றத்தில் தான் அப்பாவை போன்று இருக்கிறாரே தவிர அவரது இசை, கார்த்திக்ராஜாவிடம் இல்லை. சில படங்களுக்கு இசை அமைத்திருக்கும் அவர் பெயர் சொல்லும் அளவிற்கு எந்தப் படத்திற்கும் இசை அமைக்கவில்லை. இதனால் தந்தையின் இசையையும், செல்வாக்கையும் பயன்படுத்த தொடங்கினார். மேடையில் பாடுவதையே கடுமையாக விமர்சித்து வந்த இளையராஜாவை மேடையில் கச்சேரி செய்ய வைத்தார். ராஜாதிராஜா என்ற தலைப்பில் உலகம் முழுவதும் அவரது இசை நிகழ்ச்சியை நடத்தி பணம் ஈட்டினார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜாதி ராஜா நிகழ்ச்சியில் பாடுவதற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை அழைத்தார்களாம். அதற்கு அவர் பெரும் தொகை சம்பளமாக கேட்டதாகவும், இதில் அதிருப்தியான இளையராஜா தரப்பு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இல்லாமலே அந்த இசை நிகழ்ச்சியை நடத்தி முடித்தார் என்ற ஒரு தகவலும் உண்டு.


இதுஒருபுறம் இருக்க எஸ்.பி.பாலசுப்பிரணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் அப்பாவை போல பாடகர் தான். ஆனால் அவர் அருகில் வருகிற அளவிற்குகூட இசைத்துறையில் அவர் ஜெயிக்கவில்லை. மாறாக நடிகராக, தயாரிப்பாளராக மட்டுமே சினிமாவில் வலம் வந்தார். அவரும் அப்பாவின் இசையை, புகழை பணமாக்க விரும்பினார். எஸ்.பி.பாலசுப்பிரணியம் சினிமாவில் பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி எஸ்.பி.பி 50 என்ற இசை நிகழ்ச்சியை உலகம் முழுவதும் நடத்த தொடங்கினார்.


தன் கச்சேரியில் பாட மறுத்தவர் தன் பாடல்களை பாடி பணம் சம்பாதிப்பதா என்பது இளையராஜாவின் கோபம். இளையராஜா ஏற்கெனவே தன் பாடல்களின் உரிமத்தை ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார். அந்த நிறுவனத்தின் வழிகாட்டுதல்படிதான் காப்புரிமை சட்டத்தின் படி தன் பாடல்களை மேடையில் பாடுவதற்கு தன்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று அறிவித்தார். தற்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பாடி சம்பாதிப்பதை சுட்டிக்காட்டிய அந்த நிறுவனம், இளையராஜாவுக்கு வழங்கிய ஆலோசனையின் படியே எஸ்.பி.பாலசுப்பிரணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இளையராவின் நோட்டீஸ் காப்புரிமை சட்டத்தின் படி சரியானதுதான். ஆனால் தார்மீக அடிப்படையில் ஒரு பாடகனின் குரல் வளையை நெறிக்கிற செயல் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 40 ஆயிரம் பாடல்களை பாடியிருந்தாலும் அவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது இளையராஜாவின் பாடல்கள்தான். அப்படியிருக்கும்போது அவர் கச்சேரியில் பாடுவதற்கு கறாராக சம்பளம் கேட்டது எந்த வகையில் நியாயம் என்ற விமர்சனம் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் வைக்கப்படுகிறது. இரு மேதைகளின் மோதல் அவர்கள் உருவாக்கிய பாடல்களை மட்டுமல்ல, அதை கேட்டுக் கொண்டிருந்த ரசிகனையும் அவமதிக்கிற நிலையை உருவாக்கி இருக்கிறது என்பதுதான் உண்மை.


Advertisement
விவேகம் படத்தின் உரிமையை வாங்கியதா ஜாஸ் சினிமாஸ்?விவேகம் படத்தின் உரிமையை வாங்கியதா ... சந்திரஹாசன் ஹீரோவாக நடித்த கடைசி படம் சந்திரஹாசன் ஹீரோவாக நடித்த கடைசி ...


வாசகர் கருத்து (5)

Sivakumar Raja - chennai,இந்தியா
21 மார், 2017 - 22:02 Report Abuse
Sivakumar Raja இளையராஜா செய்வது தப்பு. இப்படியே போனால் யாரும் பாட்டு பாட முடியாது. சாமியாருக்கு எதுக்கு ராயல்டி?
Rate this:
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
21 மார், 2017 - 14:00 Report Abuse
Mayilkumar இளையராஜாவிற்கு எஸ் பி பி மீது எப்போதுமே ஒரு வெறுப்பு உண்டு. ஒரு காலத்தில் ஜானகி மற்றும் எஸ் பி பி ஆகியோரை தன்னை இசையமைப்பில் பாட இடையில் அனுமதிக்காமல் இருந்தார். சில மெல்லிசை நிகழ்ச்சிகளில் கூட அவரை பரிகாசம் செய்திருக்கிறார். சில பாடல்கள் அவர் மெட்டமைத்ததை விட எஸ் பி பி பாடியதால் சூப்பர்ஹிட் ஆனது என்பதையும் இளையராஜா அறிவார்.
Rate this:
venkat - Chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு
21 மார், 2017 - 12:10 Report Abuse
venkat Inspite of their God given gift, both Ilayaraja and SPB have proven beyond doubt that they are average and ordinary mortals.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in