ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‛தங்கல் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. இப்படத்தை தொடர்ந்து ‛தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் நடிக்கிறார் கமல். இதுதவிர விண்வெளிக்கு சென்று முதல் இந்திய வீரரான ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வந்தன.
இந்நிலையில் அமீர்கான், நேற்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமீரிடம், ராகேஷ் சர்மாவின் படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலளித்தாவது.. ‛‛தற்போது நான் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறேன், வேறு எந்த படத்திலும் நான் நடிக்கவில்லை என்றார்.
ஏற்கனவே அமீர்கான், ராகேஷ் படத்தில் நடிப்பதாக உறுதியான தகவல் வெளியான நிலையில், அவரின் இந்த பேட்டி மூலம் இப்படத்தில் அவர் நடிக்கவில்லையோ... என்ற குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
இதனிடையே செய்தியாளர்கள் வயது பற்றி கேட்டபோது, அதற்கு பதிலளித்த அமீர், ‛‛எது முக்கியமோ அதை செய்யுங்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருந்தால் வயது ஒரு தடையில்லை, அதுப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை'' என்றார்.