ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
காமெடி ஹீரோவாக தெலுங்கு திரை உலகில் வெற்றி கண்ட நடிகர் அல்லரி நரேஷ் தமிழில் குறும்பு, போராளி போன்ற படங்களில் நடித்துள்ளார். நிவின் பாலி மற்றும் மஞ்சிமா மோகன் நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஒரு வடக்கன் செல்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அல்லரி நரேஷ் நாயகனாக நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஒரு வடக்கன் செல்பி படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குனர் அனீஷ் கிருஷ்ணா இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்பட பூஜையின் போது ஒரு வடக்கன் செல்பி படத்தின் இயக்குனர் பர்ஜிதே தெலுங்கிலும் இப்படத்தை இயக்குவதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தில் நாயகியாக நடிகை நிகிலா அறிமுகமாகின்றார். ஜானவி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சந்திரசேகர் இப்படத்தை தயாரிக்கின்றார். மார்ச் 15 முதல் இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் நடைபெறும் என பூஜையின் போது அறிவிக்கப்பட்டது.