ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் மூத்த மகனும் டோலிவுட்டின் முன்னணி நடிகருமான அல்லு அர்ஜூன் மலையாள திரை உலகிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்துள்ளார். அல்லு அர்ஜூனின் தெலுங்கு படங்களில் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அல்லு அர்ஜூனைத் தொடர்ந்து அவரது தம்பி அல்லு சிரிஷ் மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
மோகன்லால் இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கும் 1971 எனும் மலையாள படத்தில் அல்லு சிரிஷ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். 1971ல் நடந்த இந்திய பாகிஷ்தான் போரை மையப்படுத்திய இப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படவுள்ளது. ஆஷா சரத், சுதீர், கண்ணா பட்டம்பி, ரெஞ்சி பனிக்கர், மனிகுட்டன், கிருஷ்ண குமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை மேஜர் ரவி இயக்குகின்றார். ஆக்ஷன் கதைக்களத்தில் அமைந்த இப்படம் ஏப்ரல் 7ல் வெளிவரும் என தெரிகிறது.