வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
உலக மகளிர் தினமான இன்று(மார்ச் 8) பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை மகளிருக்கு தெரிவித்து வருகின்றனர். டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது மகளிர் தின வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தனது தாய் இந்திரா மற்றும் தனது மகள் சித்தாராவின் புகைப்படங்களை வெளியிட்டு மகேஷ் பாபு விடுத்துள்ள மகளிர் தின வாழ்த்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகி வருகின்றது. மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங்கும் வில்லனாக பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வரும் இப்படம் ஜூன் 23 அல்லது 24ல் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.