ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
படத்துக்குப்படம் தனது கெட்டப்புகளில் ஏதாவது வித்தியாசம் இருக்கவேண்டும் என்பதை மம்முட்டி ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார். கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வெளியான 'கசபா' படத்தில் அவரது முரட்டு போலீஸ் அதிகாரி தோற்றம் நல்ல வரவேற்பை பெற்றது.. அதன்பின் தற்போது ஒரே நேரத்தில் 'தி கிரேட் பாதர்' மற்றும் 'புத்தன் பணம்' என இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார்..
இதில் பிருத்விராஜ் தயாரிப்பில் ஹனீப் அதேனி என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி கிரேட் பாதர்' படத்தில் தாடிவைத்து கேங்ஸ்டர் லுக்கில் மிரட்டும் போஸ்டர்களும் டீசர்களும் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தன. இப்போது ரஞ்சித்தின் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள 'புத்தன் பணம்' படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. முந்தைய படத்திற்கு முற்றிலும் மாறான லுக்கில் இருக்கும் மம்முட்டி இந்தப்படத்தில் கோடீஸ்வர தொழிலதிபராக நடித்துள்ளாராம்.