ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் மம்முட்டி, சினேகா இணைந்து நடிக்கும் 'தி கிரேட் பாதர்' என்கிற படத்தை நடிகர் பிருத்விராஜ் தயாரித்து வருகிறார். இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஆர்யாவுக்கு வாய்ப்பு வர, அதைவிட மனமில்லாத ஆர்யா அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப்படத்தை பிருத்விராஜ், ஆர்யா உள்ளிட்டோர் கூட்டாக நடத்திவரும் 'ஆகஸ்ட் சினிமாஸ்' நிறுவனம் தான் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் மூலம் மம்முட்டியை வைத்து பிருத்விராஜ் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.
இந்தப்படத்தில் ஆண்ட்ரூஸ் ஈப்பன் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் தான் ஆர்யா நடித்திருக்கிறாராம். இதற்கு முன் மலையாளத்தில் உறுமி, டபுள் பேரல் ஆகிய படங்களில் ஆர்யா நடித்திருந்தாலும் கூட, இந்தப்படத்தின் மூலம் ஆரயாவுக்கு மலையாள ரசிகர்களிடத்தில் ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் ஹனீப் அதேனி.. அந்தவகையில் ஆர்யாவின் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை காட்டும் விதமாக தற்போது இந்தப்படத்தில் ஆர்யாவுக்கென ஒரு ஸ்பெஷல் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார் பிருத்விராஜ். வில்லனாக நடிப்பவருக்கு இவ்வளவு பில்டப்பா என அதிசயமாக பார்க்கிறது மலையாள திரையுலகம்.